News November 25, 2025

செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 28, 2026

செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 28, 2026

செங்கல்பட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

image

செம்பாக்கத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாபர் எஸ்கே, லிப்ட் இயந்திரத்தில் இரும்பு ஷீட்டுகளை ஏற்றும்போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 28, 2026

செங்கல்பட்டு: பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்தவர் மோகன், நர்சிங் படித்து வந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், திருமணம் செய்ய மறுத்து இளம்பெண்ணை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண் காவல்நிலையில் புகார் அளித்தார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து செங்கை மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

error: Content is protected !!