News November 25, 2025
கள்ளக்குறிச்சி: கஞ்சா வைத்திருந்த நபர் வசமாக சிக்கினார்!

ராயசமுத்திரம் ஏரியில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (நவ.24) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு சந்தேகப்படும்படி பைக்-உடன் நின்று கொண்டிருந்த வடக்கீரனூரை சேர்ந்த சக்திகுமாரை சோதனை செய்த போது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த கஞ்சா, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News March 12, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச்.11) இரவு முதல் நாளை (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 11, 2026
துணை முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நாளை அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அதனை இன்று (மார்ச்.11) கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்