News November 25, 2025

கரூர் மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் அருகே தளவாபாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) சிறப்பு கல்வி கடன் முகாம் காலை 11 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மாணவர்கள் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு, வருமான சான்றிதழ், கல்லூரியில் சேர்ந்ததற்கான ஆதாரம் முதலான ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

கரூரில் உயிர் காக்கும் முக்கிய Whatsapp எண்!

image

கரூர் மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்; முக்கிய தகவல்

image

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க கரூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி முகாம் ஏப்ரல் 28 வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 9,450 பேருக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான இத்தடுப்பூசியை சிறுமிகள் செலுத்தி கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 6, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.5) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!