News November 25, 2025
தேனி: ரூ.10,000 பரிசுத் தொகை அறிவித்த கலெக்டர்

தேனியில் 4வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக இலச்சினையை (LOGO) கருத்துருவுடன் (THEME) வடிவமைத்து, தங்களது முழு முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது thenipro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 5.12.2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.10000 பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்
Similar News
News November 25, 2025
தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <
News November 25, 2025
தேனி: ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கும் இவரது கணவருக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சாந்தி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.24) அவர் அப்பகுதியில் உள்ள வராக நதி ஆற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News November 25, 2025
தேனி: கையும் களவுமாக சிக்கிய அதிகாரி சஸ்பெண்ட்

தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய லட்சுமணன் (38), விவசாய இலவச மின் இணைப்பு வழங்க விவசாயி ஒருவரிடம் ரூ.20,000 லஞ்சம் கேட்ட நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக லட்சுமணனை சஸ்பெண்ட் செய்து தேனி மின் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.


