News April 25, 2024

காங்கிரஸில் மன்சூர் அலிகான்: செல்வப்பெருந்தகை விளக்கம்

image

‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியை கலைத்து, காங்கிரஸுடன் இணைக்கவுள்ளதாக மன்சூர் அலிகான் அறிவித்தது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், காங்., கட்சியுடன் இணைவதாக மன்சூர் அலிகான் கடிதம் அளித்துள்ளார். ஆனால், இது தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மன்சூர் அலிகானின் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை

image

மறைந்த லிபிய அதிபர் மும்மர் கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி (53) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜிந்தன் நகரில் உள்ள சைஃப் கடாஃபியின் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், அவரை சுட்டுக்கொன்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஓத்மன் SM-ல் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அரசுப் பதவிகளில் இல்லையென்றாலும், லிபியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டார்.

News February 4, 2026

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா?

image

கடந்தமுறை அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோற்ற அண்ணாமலை இம்முறை தொகுதி மாறி திட்டமிட்டுள்ளாராம். கோவை அல்லது திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் நல்ல வாக்குகளை பெற்றதால், சிங்காநல்லூர், பல்லடம் அல்லது சூலூரில் போட்டியிட ஆலோசிக்கிறாராம். அதிமுக வாக்குகளும் கைகொடுத்தால் MLA ஆகிவிடலாம் என அண்ணாமலை நம்புகிறாராம்.

News February 4, 2026

இந்த வார ஓடிடி ட்ரீட்!

image

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க பல படங்கள், வெப்சீரிஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன *பிரபாஸின் ‘ராஜாசாப்’ : பிப்.6, ஜியோ ஹாட்ஸ்டார் *சரத்குமாரின் ‘கொம்புசீவி’ : பிப்.6, டெண்ட்கொட்டா *மகேந்திரனின் ‘ நீலகண்டா’: பிப்.6, சன் நெக்ஸ்ட் *’பராசக்தி’: பிப்.7, ஜீ5 *ஷர்வானந்தின் ‘நாரி நாரி நடுமா முராரி ‘: பிப்.4, அமேசான் பிரைம் * ‘The Investigation of Lucy Letby’: பிப்.4, நெட்பிளிக்ஸ்

error: Content is protected !!