News November 25, 2025

சுதர்சனம் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

image

கடந்த 2005-ல் கும்மிடிப்பூண்டி MLA சுதர்சனத்தை சுட்டு கொன்று விட்டு, அவர் வீட்டிலிருந்து 65 சவரன் நகையை பவாரியா கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஜாங்கிட் தலைமையிலான போலீசார் 9 பேரை கைது செய்தனர். இதில், 3 பேர் ஜாமீனில் வந்து தலைமறைவாக, 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் வழக்கை சந்தித்தனர். இதில், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேருக்கு நேற்று சென்னை கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Similar News

News November 28, 2025

சென்னை: புறநகர் ரயிலில் சாகசம்.. ஒலித்த எச்சரிக்கை!

image

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.

News November 28, 2025

புறநகர் ரயிலில் சாகசம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

image

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.

News November 27, 2025

முதல்வர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம்

image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என கூறியுள்ளார்.

error: Content is protected !!