News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரிதாப பலி

அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பவர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை முடிப்பதற்காக நேற்று வேலைக்கு சென்ற வெங்கடேசன் எலக்ட்ரிக்கல் பணியை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்சி: கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாம் வரும் நவ.,27-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.