News November 24, 2025
3 வயது குழந்தையுடன் தாய் மாயம்

கல்லாவி அடுத்த ஊமைகவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தாமரை செல்வன். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 3 வயதில் இனியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தேன்மொழி தனது மகன் இனியனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தாமரைசெல்வன் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
கிருஷ்ணகிரி வழியாக சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சபரிமலைக்கு செல்ல இன்று (நவ. 28) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சிறப்பு பேருந்துகளுக்கு இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, மற்ற விவரங்களுக்கு 94450 14424 , 94450 14463 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் மோகன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
கிருஷ்ணகிரியில் எரிவாயு நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரியில் இன்று (28ம் தேதி) எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களடன் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மாலை 4.30 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
News November 28, 2025
கிருஷ்ணகிரி: குடும்ப பிரச்சனை – ஜோதிடருக்கே வந்த வினை!

கிருஷ்ணகிரி: பர்கூர், வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் திருப்பதி (35). ஜோதிடரான இவருக்கு, குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திருப்பதி மிகுந்து மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


