News April 25, 2024
ராமநாதபுரம் அருகே புரோட்டா மாஸ்டருக்கு கத்திக்குத்து –

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர் புரோட்டா மாஸ்டர் நவநீதன் (48). இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பியபோது அதே ஊரைச் சேர்ந்த கார்மேகம் (26) என்பவர் ரோட்டில் இருந்து மது அருந்தி உள்ளார். அங்கு இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டதில் கார்மேகம், நவநீதனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. நவநீதன் மனைவி அன்னபூரணம் புகாரில் கேணிக்கரை போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.
Similar News
News November 21, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி

வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க வேண்டும். மீனவர் அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
ராமநாதபுரம்: 5,810 காலியிடங்கள்.. கடைசி வாய்ப்பு! APPLY

ராமநாதபுரம் மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு நவ.20 கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 21, 2025
மண்டபம் அருகே சுத்தியலால் தாக்கி இலங்கை அகதி கொலை

மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும், இலங்கை மன்னாரை சேர்ந்த கவிராஜ், 27; மலைச்செல்வம், 35; மணிகண்டன், 32, ஆகியோர் நேற்று முன் தினம் அப்பகுதியில் மது அருந்தினர்.அப்போது,ஏற்பட்ட தகராறில் மலைச்செல்வம், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கவிராஜை தாக்கி தப்பினார். காயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.


