News November 24, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 27, 2025
ராணிப்பேட்டை: கடன் தொல்லையா.. இந்த கோயிலுக்கு போங்க!

ராணிப்பேட்டையில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
News November 27, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

நெமிலி அடுத்த திருமால்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஸ்ரீநாத் (18). ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இவர், நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நெமிலி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 27, 2025
மீண்டும் மஞ்சப்பை விண்ணப்பங்கள் வரவேற்பு!

சுற்றுச்சூழலை பாதுகாக்க வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை 15-01-2026 தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


