News April 25, 2024

IPL: இன்று 300 ரன்கள் குவிக்குமா ஹைதராபாத்?

image

பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி 300 ரன்கள் குவிக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 4 முறை 200+ ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஹைதராபாத் அணி, 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில், 287/3 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. இன்றைய போட்டியில் 300-ஐ கடக்குமா?

Similar News

News February 11, 2026

நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நாகை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

10 நாள்களில் வெள்ளி விலை ₹50,000 குறைந்தது

image

<<19107790>>தங்கம் விலை<<>> ஏற்ற இறக்கத்தில் உள்ள போதிலும், கடந்த 2 நாள்களாக வெள்ளி விலை மாற்றமின்றி(கிராம் ₹300) விற்பனையாகிறது. கடந்த 31-ம் தேதி கிலோ ₹3,50,000-க்கு விற்பனையான பார் வெள்ளி 10 நாள்களில் ₹50,000 சரிந்து ₹3,00,000 ஆனது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலை தொடர்ந்தால் வெள்ளி விலை மேலும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, முதலீடு நோக்கில் வாங்குவோர் சற்று சிந்தித்து செயல்படுங்கள்.

News February 11, 2026

இந்தியாவில் ஊழல் குறைந்தது.. ஆய்வு சொல்வது என்ன?

image

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. 2024-ல் ஊழல் குறியீட்டில் 182 நாடுகளில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, 1 பாயிண்ட் குறைந்து 2025-ல் 91-ல் உள்ளது. டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் ஊழல் குறைந்த நாடுகளாக உள்ளன. சூடான், சோமாலியா ஊழல் மிகுந்த நாடுகளாக உள்ளன. மேலும், டிரம்ப் ஆட்சிக்கு பின் USA-ல் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?

error: Content is protected !!