News November 24, 2025
கிணத்துக்கடவு: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கோவை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவ்வகையில் நேற்று 10 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. பின், நடைபெற்ற ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட 1 பெட்டி தக்காளி ரூ.500 முதல் ரூ.900 வரை விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ரூ.80-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 28, 2025
கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கோவை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 28, 2025
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழக வேளாண் துறை அமைச்சர் தலைமையில் 87 வது விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக கோவையை சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செல்ல உள்ளதால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பவன் குமார் அறிவித்துள்ளார்.
News November 28, 2025
கோவையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரங்கள்!

கோவையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று பிறந்த பச்சிளம் குழந்தை, உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், சாலையில் இறந்து கிடந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மக்களே உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்க!


