News November 24, 2025

நெல்லையில் கனமழை எதிரொலி; இன்று தேர்வுகள் ஒத்திவைப்பு

image

தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் இன்று (24.11.2025) நடைபெற இருந்த 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ம.சு.பல்கலைக்கழகம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார். இதனை எல்லோருக்கும் ஷேர் செய்யவும்.

Similar News

News November 25, 2025

நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 25, 2025

நெல்லை: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் ஈரத் துணியுடன் அருந்து விழுந்த மின்வயரை பார்த்து, அதனை யாரேனும் தொட்டுவிடக்கூடாது என்று அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்த திசையன்விளை போலீசார் தனுஷின் உடலை மீட்டு நெல்லை G.H-க்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 25, 2025

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

image

மாவட்ட நிர்வாகம் இரவு விடுத்துள்ள தகவல்: அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சேர்வலாறு, காரையாறு அணைகளில் இருந்து சுமார் 12,000 கன அடி மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து சுமார் 4000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை அளவைப் பொறுத்து திறந்து விடப்படும் நீர் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம்.

error: Content is protected !!