News November 24, 2025
கோவையில் மீண்டும் பாலியல் தொல்லை! அதிரடி கைது

வடவள்ளியைச் சேர்ந்த கிஷோர்குமார் வில்வித்தை பயிற்சியாளர். இவரிடம் பயிற்சி பெற்று வந்த 15-வயது சிறுமியை சமீபத்தில் சென்னையில் பார்த்த போது காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மயக்கமடைந்த சிறுமியிடம் விசாரித்ததில், கடந்த 2 ஆண்டாக கிஷோர்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
கிணத்துக்கடவு: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கோவை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவ்வகையில் நேற்று 10 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. பின், நடைபெற்ற ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட 1 பெட்டி தக்காளி ரூ.500 முதல் ரூ.900 வரை விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ரூ.80-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News November 24, 2025
Coimbatore Day: கோவைனா கெத்து!

கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின் அது மருவி கோயம்புத்தூர் ஆனாது. இப்படி பல பேரு கொண்ட நம்ம கோவைக்கு இன்று 221வது தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பலரும் Social Media-ல கோவை நகரம் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். கோவை மக்களே, நம்ம ஊர் பெருமையை கீழே கமெண்ட் பண்ணுங்க, Share பண்ணுங்க.
News November 24, 2025
மேட்டுப்பாளையம் அருகே விபத்து

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் மைதானம் பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் நீலகிரியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி, அங்குள்ள பைக் மீது மோதியது. இதனால் இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சுற்றுப்புற மக்கள் உடனடியாக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


