News November 24, 2025
ரயில்வே வேலை, டிகிரி போதும், 8,858 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஸ்டேஷன் மாஸ்டர், எழுத்தர் உள்ளிட்ட 8,858 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு (சில பதவிகளுக்கு மட்டும்). வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹19,900 முதல் ₹35,400 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.27. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 28, 2025
ரெட் அலர்ட்.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (நவ.28) சில மாவட்டங்களுக்கு <<18407894>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை எச்சரிக்கையை பொறுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலெக்டர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மழையை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். Stay safe
News November 28, 2025
Flat, ₹37,000 சம்பளத்துடன் வேலை கொடுக்கும் பாட்டி

தன்னையும், தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகளையும் கவனித்துக் கொள்வதற்கு சீன மூதாட்டி அளிக்கும் ஆஃபர் சற்று மலைக்க வைக்கிறது. ஒரு ஃபிளாட் உடன் தேவையான பொருள்கள், மாதம் ₹37,500 சம்பளத்துடன், பெண் ஒருவரை மூதாட்டி தேடுகிறார். மூதாட்டி ஆஸ்துமா நோயாளி என்பதால், இப்படி ஒரு ஆஃபரை அளிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அதேநேரம், மூத்த மகள், தாய் & சகோதரியை கவனிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
News November 28, 2025
கொலஸ்ட்ரால் பிரச்னை வரக்கூடாதா? இத பண்ணுங்க

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எண்ணெயும் சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஆலிவ் ஆயில்: ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்திருக்கிறதாம். நல்லெண்ணெய்: இதய நோயாளிகள் மற்றும் உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு சிறந்ததாம். கடலை எண்ணெய்: வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.


