News November 24, 2025
குமரி: புலிகள் நடமாட்டம்? வனத்துறை அறிவிப்பு

திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட சேக்கல், பிலாங்காலவிளை பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக வதந்தி பரவியது. இதையடுத்து குலசேகரம் வனச்சரக அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது; இங்குள்ள கால்தடங்களை பார்க்கும்போது காட்டுப்பன்றியின் கால்தடம் போல் தெரிகிறது. புலி நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சப்பட தேவையில்லை. இரவில் மக்கள் கவனமாக நடமாடவேண்டும். என கூறினர்.
Similar News
News November 25, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
குமரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
குமரி: சப் இன்ஸ்பெக்டரை கம்பியால் தாக்கிய ரவுடி

குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விஜில் எட்வின் தாஸ். இவர் மருந்து கோட்டை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி ஆவணங்களை சமர்ப்பிக்க கூறிய போது, அந்த நபர் ஆபாசமாக பேசி உதவி ஆய்வாளரை கம்பியால் தாக்கியுள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ் (30) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்துள்ளனர்.


