News April 25, 2024
BREAKING: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்தார். இதனால், மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News September 22, 2025
அரசியல் படமாக வரும் சார்பட்டா – 2

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைக்கு இப்படம் வரவில்லை என்ற பலர் வேதனைப்பட்ட நிலையில், சார்பட்டா – 2 குறித்த அப்டேட்டை ரஞ்சித் கொடுத்துள்ளார். கதை ரெடியாகிவிட்டதாகவும், சில மாறுதல்களை மேற்கொண்டு விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான அரசியல் காலகட்டத்தை இப்படம் பேசுகிறதாம்.
News September 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 22, 2025
GST வரிக்குறைப்பு அமலானது.. விலை குறைகிறது

சமீபத்தில் மத்திய அரசு செய்த GST சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி 5%, 18% என 2 வரம்புகள் மட்டுமே. 12%, 28% கிடையாது. இதனால் வெண்ணெய், நெய் போன்ற பால் பொருள்கள், விவசாய பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள், டிவி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருள்கள், சோப்பு, பேஸ்ட், ஹேர் ஆயில், ஆடைகள், சிறிய ரக கார்கள் என ஏறக்குறைய 375 பொருள்களின் விலை குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.