News November 24, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.23) இரவு 10 மணி முதல் இன்று (நவ.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 26, 2025
அரியலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் – 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28.11.2025ம் தேதி காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
அரியலூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு அரியலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04329-223333) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News November 26, 2025
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


