News April 25, 2024
அமித் ஷாவுக்கு பவார் கேள்வி

விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அமித் ஷாவுக்கு சரத் பவார் கேள்வியெழுப்பியுள்ளார். மத்தியில் வேளாண் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நேரிட்ட விவசாயிகள் தற்கொலைக்கு சரத்பவார் மன்னிப்பு கேட்க அமித் ஷா வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சரத் பவார், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதைத்தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அவர் முதலில் பதிலளிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
Similar News
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. அரசு கொடுத்த மகிழ்ச்சி செய்தி

இந்தியாவில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளதால், உள்நாட்டு LPG உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மூன்றே நாள்களில் 10%-ல் இருந்து 25% ஆக LPG உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபடவும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளது. SHARE IT
News March 12, 2026
RCB அணியின் நட்சத்திர வீரர் விளையாடுவதில் சிக்கல்

IPL தொடர் தொடங்குவதற்கு முன்னரே RCB அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு RCB-க்கு அதிக விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த ஜோஷ் ஹேசல்வுட், இந்த IPL-ல் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் டி20 WC-ஐ தவறவிட்ட நிலையில், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தெரிகிறது. ஏற்கெனவே மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள் பங்கேற்பதில் சட்ட ரீதியான சிக்கல் உள்ளது.
News March 12, 2026
ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாகவே தெரிகின்றனர். ஆனால், மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை- மது பழக்கம், சர்க்கரை, High BP, போதிய உடலுழைப்பு இல்லாமை, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவற்றால் திடீர் மாரடைப்புகளுக்கு உள்ளாகின்றனராம். உஷார் மக்களே!


