News November 24, 2025

தினமும் சிரித்தால் இவ்வளவு நன்மைகளா!

image

இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்றவற்றுக்கு சிறந்த மருந்து சிரிப்பு தான் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். தினமும் 15 நிமிடங்களுக்கு வாய்விட்டு சிரிப்பது மன அழுத்தத்தை குறைப்பது, டைப்-2 நீரிழிவு & BP-யை கட்டுக்குள் வைப்பது, இதயத்தை காப்பது என உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகள் தரும். இயற்கையான வலி நிவாரணியாக செயல்படும் சிரிப்பு, உங்களை இளமையாகவும் தோன்றச் செய்யும்.

Similar News

News November 25, 2025

ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

image

ராமர் கோயி​லின் கட்​டு​மானப் பணி​கள் நிறைவடைந்ததை குறிக்​கும் வகை​யில் இன்று கொடியேற்​றும் விழா நடை​பெற உள்​ளது. PM மோடி இவ்​விழா​வில் பங்கேற்று, கோயி​லின் 161 அடி உயர கோபுரத்​தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்​கிறார். இதற்​காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்​கும் வகை​யில் சூரிய சின்​னம், மையத்​தில் ஓம் மற்​றும் மந்​தாரை மரம் பொறிக்​கப்​பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

image

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 25, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று கிடுகிடுவென உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,600 உயர்ந்து ₹93,760-க்கும், கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹11,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!