News November 23, 2025
ராணிப்பேட்டை: தாறுமாறாக ஓடிய கார் – அடுத்தடுத்து வாகன விபத்து!

ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூர், காசிப்பாதை தெருவில் இன்று நவம்பர்-23ஆம் தேதி கார் ஒன்று சாலையில் தவறாக வந்து திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் தெருவோரம் நிறுத்தி வைத்திருந்த 2 கார் ஒரு பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று வாகனங்கள் சேதம் அடைந்தன, பின் காரை ஓட்டி வந்த இரு இளைஞர்களை பிடித்து ஊர் மக்கள் விசாரித்தனர். இதனை அடுத்து, நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 24, 2025
ராணிப்பேட்டை: ரயிலில் கஞ்சா கடத்தல்; தட்டி தூக்கிய போலீஸ்

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சந்திரகுமார் தலைமையிலான போலீசார் சோளிங்கர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரைக் கண்டு ஓட முயன்ற இரு வாலிபர்களைப் பிடித்தனர். அவர்கள் மும்பையிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த முகேஷ் மற்றும் சுஜித்குமார் எனத் தெரியவந்தது. அவர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-23) இரவு 10 மணி முதல், இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.