News November 23, 2025
சென்னை: வாடகை கேட்ட HOUSE OWNERக்கு நேர்ந்த துயரம்

47 வயது பெண்ணின் கொருக்குப்பேட்டை வீட்டில் ராபர்ட் என்பவர் கடந்த பிப்ரவரி முதல் வாடகைக்கு குடியிருந்தார். ஆக மாதம் முதல் வாடகை பணம் சரியாக வழங்காமல் இருந்ததால், உரிமையாளர் கேட்டபோது, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் பெண்ணை தொடர்பு கொண்டு சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். புகாரின் பேரில் V-4 இராஜமங்கலம் போலீசார் ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 24, 2025
சென்னையில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் திரூஸ்(16). பிளஸ் 1 படித்து வந்தார். இவரது தாய் நிஷாந்தினி, கடந்த 2024 நவ., 24ம் தேதி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தந்தையிடம், ‘நான் அம்மாவை பார்க்க வேண்டும்; கூட்டி வாருங்கள்’ என, தொடர்ந்து கூறிவந்துள்ளார். ஒருகட்டத்தில் துக்கம் தாளாமல் திரூஸ் அம்மாவிடம் செல்கிறேன் என துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News November 24, 2025
சென்னை: பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு!

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மாணவர் ரிஷிகார்த்திக் கடந்த நவ.17அன்று தி.நகர் பாகிரதி அம்பாள் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூவர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கி, அவர் அணிந்திருந்த 1½ சவரன் தங்கச்சங்கிலியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பினர். புகாரின் பேரில் R-4 காவல் நிலையம் விசாரணை செய்து, தனுஷ் (23), ஷாம் (21), ஜோசப் (19) ஆகிய மூவரை நேற்று கைது செய்தனர்.
News November 24, 2025
’சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் போதை பொருள் விற்றேன்’

சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் போதை பொருள் விற்பனை செய்ததாக கைதான சர்பூதின் தெரிவித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவிடம் மேனேஜராக பணியாற்றினேன். சினிமாவில் சாதிக்க நினைத்து, சொந்த பணத்தை முதலீடு செய்து திரைப்படம் தயாரித்தேன். இதில், பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கடனை சமாளிக்க வழி தெரியாததால், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டேன் என்றார்.


