News November 23, 2025

நெல்லை: லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள பள்ளக்கால் பொதுக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த குணசேகரன் என்பவருடைய மகன் முருகன் (22) என்பவர் அம்பாசமுத்திரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பணஞ்சாடி குளம் அருகே எதிரே வந்த லாரி இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

நெல்லை: மழைக்கால ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்தது தொடர்ந்து இடைவிடாமல் இரண்டு தினங்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தகவல் வந்த இடங்களில் உடனடியாக மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. மழை காலத்தில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்தது. இதனை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News November 24, 2025

நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 24, 2025

நெல்லை: மழை அலர்ட் செயலியை பயன்படுத்த வேண்டுகோள்

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் டிஎன் அலர்ட் என்ற செயலியை பயன்படுத்தி மழை மழை உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்பு நிலவரத்தை தமிழில் அறிந்து கொள்ள முடியும் பேரிடர் காரணமாக பாதிப்புக்கு உள்ளான மக்கள் புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது. இதனை கூகுள் பிளே ஸ்டோர் ஆப்பிள் பதிவிறக்கம் செய்யுங்கள். SHARE!

error: Content is protected !!