News November 23, 2025

கோபி அருகே வசமாக நபர்: அதிரடி கைது

image

கோபி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் பர்கூர் தட்டக்கரை பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கௌரிசங்கர் (32) மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 27, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 27, 2025

செங்கோட்டையனுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி!

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி முன்னாள் எம்.எல்.ஏ செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 28 பேர் கொண்ட உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படவுள்ளார். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News November 27, 2025

ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

ஈரோடு, அந்தியூர் பகுதியில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல் விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் அனைத்தும் நீங்குமாம்.

error: Content is protected !!