News November 23, 2025
Squid Game USA வெர்ஷன்: புதிய அப்டேட்

தென் கொரிய தொடரான ‘Squid Game’ உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், புதிய கதைக் களம், கதாபாத்திரங்களுடன் இதன் அமெரிக்க வெர்ஷன் உருவாகவுள்ளது. இந்த வெர்ஷனை Fight Club, Panic Room போன்ற பேமஸ் படங்களை இயக்கிய David Fincher தான் இயக்குகிறார். இவருக்கு கிரியேட்டிவ் சப்போர்ட்டாக Squid Game இயக்குநர் Hwang Dong-hyuk பணியாற்ற உள்ளார். இதன் படப்பிடிப்பு 2026 பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.
Similar News
News November 24, 2025
இது நியாயமா கவுதம் கம்பீர்?

எவ்வித காரணமும் இன்றி வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் வரிசையை கம்பீர் மாற்றுவதாக ரசிகர்கள் சாடுகின்றனர். கடந்த 7 இன்னிங்ஸில் அவர் வெவ்வேறு வரிசையில் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா டெஸ்ட்டில் ஒன் டவுன் வீரராக இறங்கி சரியான டெக்னிக்குடன் சுழலை எதிர்கொண்ட சுந்தர், கவுஹாத்தி டெஸ்ட்டில் 8-வது வரிசையில் இறங்கினார். அடிக்கடி chop & change செய்வது வீரர்கள் மனதில் இன்செக்யூரிட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
News November 24, 2025
பொடுகு தொல்லை இருக்கா? இந்த தப்பை பண்ணாதீங்க

இரவில் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, அதை அப்படியே விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? இனி அப்படி செய்யவேண்டாம். இதனால், பொடுகு தொல்லை மேலும் தீவிரமாகி, முடி அதிகமாக கொட்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக, தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதுவே போதுமானது. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!
News November 24, 2025
தென்காசி விபத்து.. விஜய் வேதனை

தென்காசி <<18374035>>பஸ் விபத்தில் <<>>உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பஸ் விபத்தில் உயிர்கள் பறிபோன செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரண குணமடையும் வகையில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை விஜய் வலியுறுத்தியுள்ளார்.


