News November 23, 2025
புதுச்சேரி: அரசு வங்கியில் வேலை!

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 24, 2025
புதுச்சேரி மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதிகளான, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் (25-11-25) அன்று முதல் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள மீன்பிடி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (24-11-25) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
புதுச்சேரி: பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு!

திருக்கனூர் சுதாகர் தொழிலாளி அவரது மகள் நிவிதா, அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை நிவிதா தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியதால் குணசுந்தரி, நிவிதாவை திருக்கனூர் அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு வந்த நிவிதா, பின்னர் மாலை திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News November 24, 2025
புதுச்சேரி: தேசிய புத்தக கண்காட்சி அறிவிப்பு!

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்க நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 29வது தேசிய புத்தக கண்காட்சி வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.


