News November 23, 2025
புதுகை: பைக் மீது லாரி மோதி விபத்து

வெள்ளனூர் அடுத்த நெடுஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, செல்ல பாண்டியன் (43) என்பவர் நேற்று புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த ராஜ்குமார் (48)என்பவர் மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளனூர் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
புதுகை: கார் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் ஜெகன் எபினேஷ். இவரது தாய் சாந்தி, எபினேஷ் இருவரும் காரில் குடுமியான்மலையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி உள்ளனர். அப்போது கார் அண்ணாபண்ணை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஜெகன் எபினேஷ், இவரது தாய் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

BREAKING: புதுகை மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.