News April 25, 2024

நாமக்கல் அருகே விபரீத முடிவு

image

எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (45). ஓட்டல் நடத்தி வந்தார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால்,ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார்.கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார்.மனவேதனையடைந்த ரவி,நேற்று முன்தினம் இரவு, தற்கொலை செய்து கொண்டார்.நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நேற்று எருமப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

Similar News

News February 18, 2026

நாமக்கல்: Spam Calls பிரச்சனையா?

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . நாமக்கல் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

நாமக்கல்: பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி?

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 18, 2026

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!