News November 23, 2025
BREAKING: அதிமுக அறிவித்தது

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடும் இப்பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News January 25, 2026
திமுகவில் OPS இணைகிறாரா? அமைச்சர் ரகுபதி பதில்

OPS-யிடம் சேகர்பாபு நடத்திய பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, அமைச்சர் ரகுபதி யார் வந்தாலும் வரவேற்கும் இயக்கம்தான் திமுக என விளக்கம் அளித்துள்ளார். தங்களை நம்பி வருபவர்கள் மோசம்போவதில்லை எனவும், மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவது உறுதி என்றும் கூறியுள்ளார். திமுக கூட்டணிக்கு பாமக (ராமதாஸ்) வருமா என்ற கேள்விக்கு, தலைமைதான் முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
TOSS: இந்திய அணி பவுலிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில், பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் அணியில் இணைந்துள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் அதிரடி பேட்டிங் மூலம் மிரட்டிய இந்தியா, இன்றும் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 25, 2026
தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.


