News November 23, 2025
TVK, விஜய்யின் செயல்பாட்டில் நிகழ்ந்த மாற்றம்!

கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என அரசு முதல் நெட்டிசன்கள் வரை சாடி வருகின்றனர். 2 மாதங்களுக்கு பிறகு காஞ்சியில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு கூட்டம் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 30 நிமிடங்கள் முன்னதாகவே விஜய் வருகை தந்தார். தவெக தொண்டரணியும் <<18365491>>நிகழ்ச்சி அரங்கில்<<>> மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Similar News
News February 5, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $28 (இந்திய மதிப்பில் ₹2,532) உயர்ந்து $5,018-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 5, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா?

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை என EPS கூறிவிட்டார். இந்நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்களை கொண்டு தனிக் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எதிர்வரும் பேரவை தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
News February 5, 2026
பெயரை மாற்றினால் சாதிய பாகுபாடு மறையுமா? மதுரை HC

மக்களின் மனதில் உள்ள சாதியப் பாகுபாட்டை மாற்ற முயல வேண்டும் என மதுரை HC தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு தரப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக பெயர்களை மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் மனதில் மாற்றம் வரும் என தெரிவிக்கப்பட்டது.


