News November 23, 2025

குமரி: காசி தமிழ் சங்கமம்.. சிறப்பு ரயில் அறிவிப்பு

image

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News January 28, 2026

குமரியில் கேரளா வியாபாரி பலி

image

திருவனந்தபுரம் அருகே மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (78). இவர் மரத்தினாலான சிறு பொருட்களை குமரிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென கன்னியாகுமரிக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக குமரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 27, 2026

குமரி: பழைய வாகனம் வாங்கும் போது இது அவசியம் – எஸ்.பி

image

குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க பயன்படுத்திய வாகனங்களை(Second Hand) வாங்கும்போதும், விற்கும்போதும் ஆவணங்களில் பெயர் மாற்றம் அவசியம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பயன்படுத்திய வாகனங்கள் வாங்கும் போது 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் சட்ட மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!