News April 25, 2024

முதுமலை : சுற்றுலா பயணிகளே உஷார்

image

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் பயணியர் வசதிக்காக, சுற்றுலா சார்ந்த வாகன சவாரி, தங்கும் விடுதி ஆகியவை ‘ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதி வனத்துறை மூலம் செயல்படுகிறது. இந்நிலையில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, “MUDUMALAITIGERRESERVE. COM என்ற இணையதளத்தில் மட்டும் முன் பதிவு செய்ய வேண்டும். எந்த தனியார் ஏஜென்சிகளுக்கும் அனுமதி வழங்கப் படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

நீலகிரி: நிலம் வாங்க மானியம்: விண்ணபிப்பது எப்படி?

image

1).நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2).குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3).2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4).100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5).<>newscheme.tahdco.com<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6).மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHAREit

News December 25, 2025

சேரங்கோடு பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த மகிழுந்து

image

சேரங்கோடு மண்டசாமி கோவில் அருகே தேவாலாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற KL550216 பதிவென் கொண்ட கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் பலத்த காயத்துடன், கேரளா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து சேரம்படி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2025

தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

image

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

error: Content is protected !!