News November 23, 2025

மயிலாடுதுறை மக்களே இதை SAVE பண்ணிகோங்க!

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக தகவல் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04364 222588, கட்டணமில்லா தொலைபேசி எண் 04364 1077, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 9442626792 ஆகியவற்றிற்கு தொடர்பு கொள்ளலாம்

Similar News

News November 24, 2025

மயிலாடுதுறை: ஆற்றில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர் ஊராட்சியில் அனந்தமங்கலம் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில், நேற்று இரவு சாலையில் சென்ற சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காரில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

News November 24, 2025

மயிலாடுதுறை: நீர் நிலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்போது பரவலாக பல இடங்களிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக ஆறுகள் குளங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், வாய்க்கால் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் குழந்தைகளை செல்ல அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு காவல்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News November 24, 2025

மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!