News November 23, 2025

எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடுகளுக்கு வார்னிங்!

image

எந்தவொரு நாடும் தனது வலிமை (அ) அச்சுறுத்தல்களை பயன்படுத்தி, பிறநாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்க கூடாது என்ற கூட்டு பிரகடனத்தை ஜி20 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இது ரஷ்யா, இஸ்ரேல், மியான்மருக்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேபோல், நேற்றைய உச்சிமாநாட்டில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்தன. மேலும், பசியின்மை, பாலின பாகுபாட்டை களையவும் அறைகூவல் விடுத்துள்ளன.

Similar News

News February 5, 2026

மலேசியா செல்லும் PM மோடி

image

2 நாள் அரசுமுறைப் பயணமாக பிப்.7-ல் PM மோடி மலேசியா செல்கிறார். இதில் அந்நாட்டு PM அன்வர் இப்ராஹிமை சந்தித்து பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் & வர்த்தகம் குறித்து ஆலோசிக்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக 10-வது இந்தியா, மலேசியா CEO-க்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினர், வணிகப் பிரதிநிதிகளுடன் PM மோடி உரையாடுகிறார்.

News February 5, 2026

தர்ணாவில் ஈடுபடுவேன்: ராஜமெளலி

image

தான் இயக்கும் ‘வாரணாசி’, 3 மணிநேரம் ஓடக்கூடிய ஒரே பாகமாக மட்டுமே வெளியாகும் என ராஜமெளலி தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் வந்துவிடுமா என்ற கேள்விக்கு, நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட இடத்தின் முன்பு தர்ணா செய்வது வழக்கம். அதன்படி இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி US-ல் உள்ள IMAX அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றார்.

News February 5, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

error: Content is protected !!