News November 23, 2025

மது, Fast Food-க்கு தடை, மீறினால் ₹1 லட்சம் அபராதம்

image

திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, Fast Food உள்ளிட்டவை சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், உத்தராகண்டின் ஜான்சர்-பவர் பழங்குடி பகுதியிலுள்ள 25 கிராமங்களில், மது, Fast Food-க்கு தடை விதித்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, பீட்சா, பாஸ்தா, மோமோஸ் போன்ற Fast Food-ஐ விருந்தினர்களுக்கு வழங்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்.

Similar News

News November 23, 2025

உங்க குழந்தை உயரமா வளரணுமா? இத கொடுங்க..

image

உங்கள் குழந்தை வயதுக்கேற்ற உயரத்துடன் வளரவில்லை என கவலையா? டாக்டர்கள் பரிந்துரைக்கும் இந்த பவுடரை வீட்டிலேயே அரைத்து கொடுத்து பாருங்கள். ▶முதலில், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதை & தேங்காயை ஒரு பாத்திரத்தில் வறுக்கவும். ▶அதை நன்றாக அரைத்து, கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். ▶இதை தூங்குவதற்கு முன், பாலில் கலந்து கொடுக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். SHARE.

News November 23, 2025

நாளை பள்ளிகளுக்கு 3 மாவட்டங்களில் விடுமுறை

image

கனமழை முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி, மேலும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்.

News November 23, 2025

சட்டென காணாமல் போன நடிகைகள்

image

மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சில நடிகைகள், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர். பலரும் ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு மறைந்தனர். அவர்களில் சில மறக்கமுடியாத நடிகைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களால் மறக்க முடியாத நடிகை யார்? SHARE

error: Content is protected !!