News April 25, 2024
“திமுக கூட்டணி உடையும்”

கோவை அதிமுகவின் கோட்டை, திமுக, பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை என அதிமுகவின் ஐ.டி.விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளை மிரட்டி திமுக, தன்னுடன் வைத்திருப்பதால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணி உடையும் எனக் கூறிய அவர், அண்ணாமலை ட்விட்டரில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக்கொள்ளலாமே தவிர, கள அரசியலில் வெற்றிபெற முடியாது; அவர் படுதோல்வி அடைவார் எனத் தெரிவித்தார்.
Similar News
News February 3, 2026
சம்பளம் ₹2,000 உயர்கிறது.. இனிப்பான செய்தி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026-ம் ஆண்டின் தொடக்கமே இனிப்பான செய்தியுடன் தொடங்கியுள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படி 58% இருந்து 63% ஆக உயரவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ₹40,000 என்று வைத்துக்கொண்டால், பழைய DA படி (58%) ₹23,200 இருக்கும் சம்பளம், புதிய DA (63%) படி ₹25,200 ஆக உயரும். இதன்மூலம் ₹2,000 வரை சம்பளம் அதிகமாக கிடைக்கும்.
News February 3, 2026
இரண்டாக உடைந்த TN காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்

திமுக இன்றி தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது என FM நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளதாகவும், ஒரு தரப்பு தவெகவுடன் கூட்டணி அமைக்கவும், மற்றொரு தரப்பு திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். TN காங்கிரஸ் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
இனி தங்கம், வெள்ளி பதக்கங்கள் கிடைக்குமா?

விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம், வெள்ளியின் விலை தினமும் உயர்ந்து வருவதால், இனி விளையாட்டு, கல்வி நிறுவனங்களில் இந்த பதக்கங்கள் கொடுப்பது சிக்கலாகியுள்ளது. தங்கம், வெள்ளி பதக்கங்களுக்கு கூடுதல் செலவாகும் என்பதால், மாற்று உலகத்தை பயன்படுத்தலாமா என விளையாட்டுத்துறை நிர்வாகிகள், கல்வியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதனால் பட்டமளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கத்தை பார்ப்பது கடினம்.


