News November 23, 2025
விருதுநகர்: ஆசிரியர் அடித்ததில்.. மாணவருக்கு ஆபரேஷன்

விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10th படிக்கும் மாணவரை, வகுப்பறையில் நவ., 17ல் சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பிரம்பால் அடித்தார். அப்போது, அருகே அமர்ந்திருந்த மாணவரின் இடது கண்ணில் பிரம்படி பலமாக விழுந்ததால், கருவிழியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. மதுரை தனியார் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 24, 2025
விருதுநகர்: நவ.28-க்குள் விண்ணப்பிக்கவும் – ஆட்சியர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
விருதுநகருக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
விருதுநகர்: குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை ( 04562 – 293946) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


