News November 23, 2025
காஞ்சி மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்

சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். QR குறியீடு உள்ள அனுமதி அட்டை பெற்ற 2,000 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர். இதற்காகக் கல்லூரியைச் சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பெண்கள் & விவசாயிகளுடன் விஜய் கலந்துரையாட உள்ளார்.
Similar News
News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.