News November 23, 2025
விழுப்புரம்: சப்பாத்தி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!

விழுப்புரம்: கரடிக்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி மகள் பூவரசி (14). நேற்று முன்தினம் இரவு பூவரசி சப்பாத்தி, குருமா சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பூவரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவளை பெற்றோர் சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே பூவரசி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 1, 2026
விழுப்புரம் அருகே துணிகர திருட்டு!

தி.வெ.நல்லூர் அருகே டி. எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அலி இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முகமது அலி மனைவி சைதாபீபீ தனது இரு மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. சம்பவ இடத்திற்கு வந்து திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.
News February 1, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.31) இரவு முதல் இன்று (பிப்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
விழுப்புரம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


