News November 23, 2025

நாமக்கல்லில் வரலாறு காணாத விலை உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (நவ.23) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ (உயிருடன்) ரூ. 94-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ. 122-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதே போல், முட்டை கொள்முதல் விலை ரூ.6.10- ஆக விற்பனையாகி வருகின்றது. வட மாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முட்டை விலை வரலாறு காணாத உச்ச நிலையில் விற்பனையாகி வருகிறது.

Similar News

News November 24, 2025

நாமக்கல்: WhatsApp-ல் சிலிண்டர் புக்கிங் எப்படி?

image

நாமக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!

News November 24, 2025

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள்கள் அரசின் இலவச தையல் மிஷின் பெற உரிய ஆவணங்களுடன் நவ.25ந் தேதிக்குள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் முகவரியில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய, மாநில அரசு (ம) அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாத தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News November 24, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!