News November 23, 2025
தலை சுற்ற வைக்கும் அம்பானி பள்ளியின் கட்டணம்!

மும்பையில் இயங்கி வரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் வசூலிக்கப்படும் கட்டணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. *Kindergarten to 7th: ₹1.70 லட்சம். * 8 -10th (ICSE): ₹1.85 லட்சம். *8- 10th (IGCSE): ₹5.9 லட்சம். * 11 – 12th (IBDP): ₹9.65 லட்சம். ஷாருக்கான், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் குழந்தைகள் இங்குதான் படிக்கின்றனர்.
Similar News
News February 14, 2026
திமுகவை அகற்றுவதே நமது அஞ்சலி: அண்ணாமலை

கோவையில் 1998-ல் திமுக ஆட்சியில், இதே நாளில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 58 உயிர்களை பறிகொடுத்தது மனதில் ஆறாத வடுவாக பதிவாகியிருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். குண்டுவெடிப்பு குற்றவாளிகளை தண்டனைக் காலம் முன்பாகவே விடுவித்து, உயிரிழந்த மக்களுக்கு திமுக துரோகம் செய்ததாகவும், அதனை ஆட்சியில் இருந்து அகற்றுவதே, உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 14, 2026
தமிழ் சினிமாவின் ஹிட்டான காதல் ஜோடிகள்!

காதலர் தினம் என்றாலே தியேட்டர் முதல் டிவி வரை பார்க்கும் இடமெல்லாம் காதல் படங்களே நிரம்பி வழியும். அப்படி இருக்கும் போது, தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களையும், அந்த ஹிட் ஜோடிகளையும் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? அந்த வகையில் டாப் 5 காதல் படங்கள் எது என்பதை வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள். இதில் உங்களின் மனம் கவர்ந்த காதல் படம் & ஜோடி எது என மறக்காமல் கமெண்ட்டில் சொல்லிட்டு போங்க.
News February 14, 2026
திமுக தோற்ற 40 தொகுதிகளை கேட்கும் மாணிக்கம் தாகூர்!

ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை; அதிகார பகிர்வு அவசியம் என காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மதுரையில் நேற்று பேசிய அ<<19136927>>மைச்சர் ராஜகண்ணப்பனுக்கு<<>> பதிலடி கொடுக்கும் வகையில், 2021 தேர்தலில் 173 தொகுதியில் போட்டியிட்டு திமுக தோல்வியடைந்த 40 தொகுதிகளை தான் நாங்கள் கேட்கிறோம் என சூசகமாக பதிவிட்டுள்ளார். இது கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


