News November 23, 2025
தருமபுரியில் மளமளவென உயர்ந்த விலை!

தருமபுரி: சபரிமலை சீசன் எதிரொலியாக தருமபுரி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோன்று சன்னமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களின் விலையும் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
இதேபோன்று ஜாதிமல்லி ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.600-க்கும். நந்தியாவட்டம் ரூ.500-க்கும், அரளி ரூ.200-க்கும். செவ்வரளி ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும் விற்பனையானது.
Similar News
News February 4, 2026
தர்மபுரி : இரவு ரோந்து பணி காவல் ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 3) இரவு முதல் நாளை (பிப்- 4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை ஆட்சியர் சதீஷ் ஆய்வு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ரெ.சதீஸ், இன்று (பிப்.3) மாலை 4 மணி அளவில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் .சி.க.ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News February 3, 2026
தருமபுரி: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

தருமபுரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க


