News November 23, 2025
காந்திபுரத்தில் பாலியல் தொழில்! சிக்கிய 3 பேர்

கோவை, காந்திபுரம் ராம்நகரில் தனியார் விடுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வந்தது. காட்டூர் போலீசார் ரகசிய தகவலின் பேரில் நேற்று சோதனை நடத்தி, நேபாளைச் சேர்ந்த அதிராம் சவுத்ரி(31), உத்தரபிரதேசத்தை சேர்ந்த கிஞ்சால்(24), ஹரியானாவை சேர்ந்த யசோதா(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பெண்களை காப்பகத்திற்கு அனுப்பினர்.
Similar News
News January 28, 2026
Power Shutdown: கோவையில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் இன்று(ஜன.28) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, மைலம்பட்டி, சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கேஎன்ஜி புதூர், தாடாகம் சாலை, சோமையம்பாளையம், வேடவேடம்பட்டி, வதம்பச்சேரி பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)
News January 28, 2026
கோவை: அடுத்தடுத்து மயக்கம்.. 10 நாள்கள் கல்லூரி விடுமுறை

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 33 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்பு துறையினர் விடுதியில் இருந்த உணவு (ம) குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த செவிலியர் கல்லூரிக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
News January 28, 2026
கோவை ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு 33-க்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில், மாற்றுத்திறனாளி வீரர்களுக்காக ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமையவுள்ளது. 1.10 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் விளையாட்டு வளாகத்தின் மாதிரித் தோற்றம் வெளியாகியுள்ளது. இது வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவில் ஜொலிக்கப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


