News November 23, 2025
ரஜினியுடன் 3-வது முறை இணைகிறாரா?

ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவரா அவரா என ஆயிரக்கணக்கான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் ரஜினி இன்னும் எந்த இயக்குநரையும் இறுதி செய்யவில்லை. இதனிடையே நேற்று விமான நிலையத்தில் பா.ரஞ்சித்தை எதிர்ச்சையாக ரஜினி சந்தித்து பேசினார். உடனே பா.ரஞ்சித்துடன் 3-வது முறையாக சூப்பர் ஸ்டார் இணையப்போகிறார் என்ற கதைகள் வர தொடங்கியது. ஏற்கனவே இருவரும் சேர்ந்து கபாலி, கலா ஆகிய 2 படங்களில் பணியாற்றினர்.
Similar News
News February 17, 2026
திண்டுக்கல்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<
News February 17, 2026
திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்கும் IUML

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியில் தொடருவதாக IUML தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் எனக்கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் IUML-க்கு 5 தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக 5 தொகுதிகள் ஒதுக்கினால், அதில் ஒன்று மகளிருக்கு வழங்கப்படும் எனவும் கூறினார்.
News February 17, 2026
AI உச்சி மாநாட்டில் UPI வசதி இல்லையா?

<<19162885>>AI உச்சி மாநாட்டில்<<>> UPI வசதி இல்லாதது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த உணவு கடைகளில் UPI ஏற்கப்படாமல், பணம் மட்டுமே வாங்கப்பட்டதால் பெரும் சிரமத்தை சந்தித்ததாக பங்கேற்பாளர்கள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், டிஜிட்டல் இந்தியாவை முன்னிறுத்தும் நிகழ்ச்சியில் UPI வசதி இல்லாததற்கு நெட்டிசன்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


