News April 25, 2024

பாஜக நமக்கு சவக்குழி தோண்டி புதைத்து விடும்

image

கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் தான்தோன்றித்தனமான ஒரு கொடுங்கோல் ஆட்சி நடந்தது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர்,
பிரதமர் மோடிக்கு இன்னும் 5 ஆண்டுகள் நாட்டை ஆளும் வாய்ப்பைக் கொடுத்தால் சவக்குழி தோண்டி, நம்மைப் புதைத்து மூடிவிட்டுப் போய்விடுவார். மதத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள் மக்களைப் பற்றி எப்படிச் சிந்திப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News September 22, 2025

BREAKING: வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு

image

கிராம உதவியாளர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுப்பிரிவினருக்கு 32, BC, MBC, DNC பிரிவினருக்கு 39-ஆகவும், SC & ST மற்றும் கைம்பெண்களுக்கு 42-ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கிராம உதவியாளராக நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமும் இந்த வயது வரம்பு நிலையை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

News September 22, 2025

ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்கலாம்!

image

ஆபிஸ், பள்ளி, காலேஜுக்கு பஸ், ரயில் என மாறி மாறி செல்பவர்களின் பயணத்தை ஈசியாக்க, ‘சென்னை ஒன்’ APP-ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். இனி ஒரே டிக்கெட்டில் சிட்டி பஸ், லோக்கல் ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். எந்த வழித்தடத்தில் எந்தெந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தப் போகிறோம் எனக் குறிப்பிட்டு QR CODE டிக்கெட்டை பெறலாம். விரைவில் பிற நகரங்களுக்கும் இந்த வசதி வருமா?

News September 22, 2025

மூலிகை: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா..

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
➣பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் & கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் ➣ஃபோலேட் இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது ➣பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது ➣பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை வராமல் தடுக்கும். இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!