News April 25, 2024
கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரிப்பு

நாட்டில் உள்ள கடன் அட்டைகளின் (கிரெடிட் கார்டு) எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023 மார்ச் மாதம் நாட்டு மக்களிடம் இருந்த கடன் அட்டைகள் எண்ணிக்கை 8.5 கோடியாக இருந்தது. இது 2024 பிப்ரவரி மாதம் 10 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் 2024 மார்ச்சில் அந்த எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் எச்டிஎப்சி 20%, எஸ்பிஐ 18.5%, ஐசிஐசிஐ 16.6% பங்களிப்பு செய்கின்றன.
Similar News
News April 11, 2026
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 11, 2026
செங்கை: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய இங்கே<
News April 11, 2026
2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு அனுமதி இல்லை

மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், டெல்லி அரசு மின்சார வாகன கொள்கை 2026-2030 எனப்படும் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், ஏப்ரல் 1, 2028 முதல் பெட்ரோல், டீசல் பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என்றும், EV வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், EV வாகனம் வாங்குபவர்களுக்கு ₹1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை, 100% சாலை வரி தள்ளுபடி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.


