News November 23, 2025
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புவனா என்ற 20 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவு, வயதுமூப்பு காரணமாக பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது. பூங்காவில் மொத்தம் 7 சிங்கங்கள் பராமரிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சிங்கம் உயிரிழந்துள்ளது.
Similar News
News November 23, 2025
சென்னை மக்களே 4 வகையான கடன்களை பெறலாம்!

சிறுபான்மையினர்களுக்கு, குறைந்த வட்டியில் தனிநபர் கடன் (ரூ.30 லட்சம்), சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் (ரூ.1 லட்சம்), கைவினை கலைஞர்களுக்கான கடன் (ரூ.10 லட்சம்), கல்வி கடன் வழங்கப்பட உள்ளன. ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ.3 லட்சம், நகர்புறங்களில் ரூ.8 லட்சம் இருக்க வேண்டும். சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் (044-25241002 9445477825). ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
சென்னை: ரயிலில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து சென்னைக்கு இன்று(நவ.22) அதிகாலை வந்த விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் குழந்தையை கண்டெடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, பின்னர் அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


