News April 25, 2024

வேலூர் மாவட்டத்தில் நேற்றைய வெயில் அளவு

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.24)  அதிகபட்ச வெயிலாக  106.9°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News March 7, 2026

வேலூரில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

வேலூரில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்ஃபர்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து எஸ்.பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ரஜினி, ஏழுமலை ஆகியோர் வேலூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மிதிலேஷ்குமார் ஆகியோர் வேலூர் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News March 7, 2026

வேலூரில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு!

image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நேற்று (மார்ச் 06) சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!