News November 23, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து போலீசார் விவரம்

செங்கல்பட்டில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
செங்கல்பட்டு: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
செங்கல்பட்டு: கிரேன் மோதி காவலாளி பலி

கூடுவாஞ்சேரி பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாசி (45), பணியில் இருந்தபோது பின்னால் இயக்கப்பட்டு வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 24, 2025
செங்கல்பட்டு: ஒரே இரவில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோ-களில் திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், ஸ்டாலின் மற்றும் அண்ணா தெருக்களில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் டேஷ்போர்டுகளை உடைத்து, அதிலிருந்த சில்லரை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஒரே இரவில் நடந்த இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


