News November 23, 2025
ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Similar News
News February 12, 2026
திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில், பொறியியல் பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது வரும் 13, 16, 18 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 12, 2026
திருச்சி: டிகிரி போதும் – வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


